இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே
மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்
முன்னுரை :-
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே என்ற நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டு வருகின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் சக மனிதர்களுக்கும் பசி இருக்கும் என்பதை உணர்ந்து அவர்களின் பசியாற நாம் சமையல் செய்யும் பொழுது எண்களின் உள்ளுணர்வில் அவர்களின் நன்மையை நோக்கியே அவர்களின் தேகபலமும் மனோபலமும் மற்றும் அவர்களின் உடல் ஆற்றலை கருத்தில் கொண்டு எங்களை அர்ப்பணித்து இந்த அன்னதர்ம பணியை இறையருளால் செய்து வருகிறோம்
நோக்கம் :-
சக மனிதர்களை நேசிப்போம் என்ற நோக்கத்தோடு சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் எவரேனும் ஒருவர் இந்த அன்னத்தை உண்டு தன்னிலை உணர்ந்து இந்த அன்னதர்ம பணியை செய்தால் அதுவே கருணை கதிரின் முதல் வெற்றி.
கருணை கதிரின் மனநிலை :-
பாரபட்சமின்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே என்பதை உணர்ந்து இந்த அன்னதர்ம பணியை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் செய்து வருகிறோம்.
வரலாறு :-
தினமும் ஒருத்தருக்காவது பசியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றிய கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் இன்று 600 நபருக்கு மேலாக பசியாற்றி வருகிறோம் . மேலும் தங்களால் முடிந்த பல வசதிகளை செய்து வருகிறோம் . இச்செயலை கடந்த 2013ம் வருடத்தில் இருந்து செய்து வருகிறோம் “இறைவா பசிப்பவர்களுக்கு உணவை கொடு ! இல்லையென்றால் பசிக்காத வயிற்றை கொடு ! என்று புலம்பிய நாங்கள் பசி என்னும் கொடிய நோய்க்கான மருந்தெனும் உணவை செய்து வருகிறோம் . இச்செயலை கண்டு கருணை கதிர் நண்பர்களின் வட்டாரம் தற்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
[ மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும் ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாளா திசையும் செல்லும் ]
எங்கள் அன்னதர்மப்பணியில் தேவைப்படும் பொருள் கிடைக்காத சூழ்நிலையில் இறைவனின் அருளோடு யார் ஒருவரின் மூலமாகமோ வந்தடைகிறது