எங்கள் சேவைகள்

அன்னதர்மபணி:-

ஆதரவற்றோர்கள் அனைவர்க்கும் அன்னதர்மம் வழங்கப்படுகிறது மேலும் யாரேனும் ஒருவர் பசியுடன் நம் Trust-க்கு வந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு உணவை செய்து கொடுக்கின்றோம்
இதன் முலம் ஆதரவின்றி பசியால் வாடும் அனைவரும் பதிவாக நம் Trust-க்கு வந்து உணவு உண்டு செல்கின்றனர்.

“நீங்கள் சாப்பிடும் உணவில் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரியவில்லை ஆனால் நீ வீணாக்கும் உணவில் அடுத்தவரின் கொடிய பசி உள்ளது என்பதை மறவாதே”

மரக்கன்று நடுதல்:-

“மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்”
நான் விடும் மூச்சு காற்றில் தான் நீ வாழ்கிறாய் என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்கு சமம் - மரம்

எங்கள் டிரஸ்ட்ன் ஒரு சில தோட்டங்களில் மரக்கன்று வைத்து அதை வாரம் ஒரு முறை திருநெல்வேலி சுறுப்புற பகுதியில் எங்கள் கருணை கதிர் நண்பர்களின் ஒரு குழு மரக்கன்று நடும் பணியை செய்து வருகிறது மேலும் நமது Trust-க்கு வரும் சிறப்பு விருந்தினர் மற்றும் திருநெல்வேலி காவல் அதிகாரிகள், பொதுமக்கள் போன்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க படுகிறது. யாருக்கும் மரக்கன்றுகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புக்கொண்டு எங்கள் இல்லத்தில் வந்து வாங்கிக்கொள்ளலாம்.

“குழந்தை ஒன்று பிறந்தால் மரம் ஒன்று நடு பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு நான் நிழலாக இருப்பேன்-இப்படிக்கு மரம்”

குழந்தைகளுக்கான மருந்து:

குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ குணம் கொண்ட துளசி, வெற்றிலை, தூதுவளை, கண்டங்கத்திரி, கற்றாழை ஓமவல்லி ஆகிய மூலிகைகள் இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.

கொரோனா உரடங்கில் நமது பணிகள்:-

கொரோனா எண்ணும் கொடிய வைரஸ் பரவுவதையும் பொறுப்பெடுத்தாமல் நமது கருணை கதிர் டிரஸ்ட்
நண்பர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களின் மக்களுக்கு தேவையான கபாசுர குடிநீர் மற்றும் அன்னதர்மம் செய்து வந்துள்ளது, தற்போது வாரம் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் அன்னதர்மம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

வேதனையும் வலியும் :-

கண்ணுக்கு தெரியாத கிருமி கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது!
ஊருக்கு வெளியில் உருவாகிய வைரஸ் உலக மக்களை அளிக்கிறது!
சைனாவில் கண்டறிந்த வைரஸ் சைனைடாய் மாறி மனிதனை கொள்கிறது!!

எங்களின் அடுத்த இலக்கு:-

கருணை கதிர் டிரஸ்ட்-ன் அடுத்த இலக்காக ஆதரவற்ற மக்கள் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான ஆம்புலன்ஸ் , ஃப்ரீஸர் பெட்டிமற்றும் இறுதியாத்திரை வண்டி ஆகியவை இலவசமாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும்,மேலும் ஆதரவற்றோர் கொரோனாவில் உயிரிழந்த மக்களுக்கு இறுதி சடங்கு இலவசமாக செய்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம், பிற்காலத்தில் கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகிருக்கு தேவையான அனைத்து வசதிகளை கொண்ட இருப்பிடம் ஆரமிப்பதே எங்களின் இலக்காகும்

ரத்ததானம் மற்றும் விருது வழங்குதல் :-

கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் ப்ரண்ட்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் & ரத்ததான கழகம் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது,மேலும் எங்களிடம் 1500 ரத்த கொடையாளிகள் இருக்கின்றனர் இதன் மூலம் பலருக்கு ரத்ததானம் வழங்கியுள்ளோம்