நெல்லை தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

தாமிரபரணி நதியை பாதுகாப்பது நம் கடமை

“நீரின்றி அமையாது உலகு”

திருநெல்வேலியில் மிக முக்கிய பங்கான தாமிரபரணி நதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரின் சார்பில் இன்று 23-ஆம் தேதி  தாமிரபரணி ஆற்றங்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி பல இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு தாமிரபரணியின் ஒரு பகுதியாக திருநெல்வேலி டவுண் குறுக்குத்துறை பகுதியினை சுத்தம் செய்தனர். இந்த பணி இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

ஒவ்வொரு இடங்களில் குடிநீர் கூட பணம் கொடுத்து வாங்கி குடிக்க கூடிய நிலைமை தற்போது வரை இருந்து கொண்டிருக்கிறது.  அப்படி இருக்கும் சூழ்நிலையில் நமது திருநெல்வேலியை சுற்றி முழுவதுமாக தாமிரபரணி நதி ஓடுகிறது.அந்த நதியில் உள்ள குடிநீர் மற்றும் அதனுடைய சுற்றுப்புறங்களை பாதுகாக்க வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும் எனவே அசுத்தங்கள் ஏதும் செய்யாமல் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அதில் நதியில் விடாமல் துணிகளை நதியில் விடாமல் அந்த நதிக் கரையை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

…இயற்கையை நேசிப்போம்…

…தாமிரபரணியை பாதுகாப்போம்….