“பாபநாசம் புண்ணிய நதிக் கரையின் ஓரத்தில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிய நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்”

“புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்”

“இயற்கையை காப்போம்

!! பாபநாசம் புண்ணிய நதிக் கரையின் ஓரத்தில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிய கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் !!

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக பொதுமக்களுக்கு பல சேவைகள் தற்போது வரை செய்து கொண்டு இருக்கிறோம்.

அதில் குறிப்பாக 15.04.2022 காலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் புண்ணிய நதிக் கரையின் ஓரத்தில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை போட்டுள்ளனர். இதைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கொடுத்த அரை மணி நேரத்தில் நமது கருணை கதிர் டிரஸ்டின் உறுப்பினர்கள் விரைந்து அந்த இடத்திற்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை எடுத்து தனது வாகனத்தில் வைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர்.

அந்த மருத்துவ கழிவுகளில் இருக்கக்கூடிய தொலைபேசி நம்பரை அழைத்து அவர்களிடம் இனிமேல் இந்த மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை புண்ணிய நதிக்கரைகளில் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செலுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளோம்.

ஏற்கனவே கருணை கதிரி டிரஸ்ட் நண்பர்கள் கடந்த 4-வருடங்களுக்கு மேலாக பாபநாசத்தில் இருக்கக்கூடிய புண்ணிய நதிக் கரையை சுற்றி மாதம் ஒரு முறை சுத்தம் செய்யும் பணியை தற்போது வரை செய்து கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து இயற்கையை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாமிரபரணி ஆறு :-

பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.

இயற்கையை காப்போம் :-

‘புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்’ என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. ‘இந்திய குடிமக்கள் அனைவரும்
காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்’ என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.