திருநெல்வேலி டவுன் அரசன் நகர் பகுதியில் ஆதரவில்லாமல் பல வருடங்களாக பொதுமக்களின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் திரு.மாரியப்பன் என்பவர் வழுக்கோடை பகுதியில் இருக்கக்கூடிய நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்-ல் வாடிக்கையாக உணவு வாங்கி உண்பதில் வழக்கமாக இருந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் உணவு வாங்க வரவில்லை என்று விசாரித்த போது அவர் காலில் மிக பெரிய காயம் உள்ளது அதனால் அவர் நடக்க முடியாமல் ஆகாரமின்றி பேருந்து நிலையத்தில் மிக பரிதாபமான நிலைமையில் உள்ளார் என்று தெரியவந்தது.
உடனே நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர் திரு.மணிகண்டன் அவரை பார்வை செய்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை மருத்துவரின் ஆலோசனையில் தாய் வீடு தொண்டு நிறுவனம் திருமதி காஞ்சனா அவர்கள் மூலமாக தொடர்ந்து 13நாட்கள் சிகிச்சை செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-09-2024) தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரில் உள்ள அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷன் என்ற ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் சேர்த்துள்ளார்கள் .
காயம் வேகமாக சரியாகி நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார்.
இதற்குப் பெரும் உதவியாக இருந்த நெல்லை கருணை கதிர் ட்ரஸ்ட் நண்பர்கள் திரு மணிகண்டன், திரு பிச்சையா, திரு செந்தில், திரு வேல்முருகன், திரு ஆவுடையப்பன் மற்றும் அரசன் நகர் மேரிலதா அவர்களுக்கும்
முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய நாங்கள் கண்ட வாழும் அன்னை தெரசா திரு காஞ்சனா அவர்களுக்கும்
அந்த நபரை அழைத்துச் செல்வதற்கு வாகன உதவி செய்த மீனாம்பிகா லாரி செட் உரிமையாளர் திரு வேல்மணி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
!! சக மனிதர்களை நேசிப்போம் !!