(கரிநாள் 16-01-2023) காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து அன்னதர்ம பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

தொடர் அன்னதர்ம பணி

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக இன்று கரிநாள் சாலையோர உள்ள உணவகங்கள் இல்லாத காரணத்தால் ஆதரவற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு கருணை கதிர் டிரஸ்ட்டின் சார்பாக காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து அன்னதர்ம பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த அன்னதர்ம பணியில் பல பொதுமக்கள் சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் வெளியூர் வாசிகள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு தனது பசிப்பிணியை போக்கினர்.

பாரபட்சம் இன்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே என்பதை ஆழ்ந்த உணர்ந்த கருணை கதிர் டிரஸ்ட்டின் சார்பாக வாரம் இரு தினங்களில் அன்னதர்ம பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் திருநெல்வேலி சுற்றுப்புறப் பகுதிகளில் ஏதேனும் ஒரு விசேஷ நிகழ்வில் உணவு மீண்டும் கருணை கதிர் நண்பர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று உணவை வீணாக்காமல் சாலையோரங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இறைவன் கருணையினால் உணவளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும் உணவை உற்பத்தி செய்த உழவனுக்கும் அதை சமையல் செய்த இறைவனுக்கும் அதை வழங்கிய இறைவனுக்கும் அதைப் பெற்ற இறைவனுக்கும் அதை பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும் பூரணம் பரிபூரணம் சம்பூரணம்.