விருது வழங்கும் விழா-2024

விருது வழங்கும் விழா-2024 நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனம் இணைந்து ஞாயிற்று கிழமை (20-10-2024) மாலை திருநெல்வேலி டவுண்,பேட்டை ரோடு , M.S மஹாலில் வைத்து விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு அறுசுவை விருந்து நடைபெற்றது.

விருது வழங்கும் விழா :-
சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றோர்கள்,மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி செயல்படும் சமூக அக்கறையாளர்கள்,மருத்துவர்கள்,மனிதநேயமிக்க காவலர்கள்,வழக்கறிஞர்கள்,ஆசிரியர்கள் மற்றும் துப்புரவுப்பணியாளர்கள் போன்றோர்க்கு விருது வழங்கி கௌரவப்படுத்தும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.விருதிற்கு பணம் ஏதும் வாங்காமல் தங்களின் சேவையை மட்டுமே கருத்தில் கொண்டு தகுதியான நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

வெவ்வேறு செடியில் பூத்த இரு மலர்கள் ஒரே மலையில் வாசம் வீசுவது மிக சிறப்பாக இருந்தது. இந்த பயணம் மென்மேலும் தொடர பலர் வாழ்த்துக்களை கூறினார்.

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் – 9952572215 , 9788844478