நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் மீண்டும் ஒரு புதிய முயற்சி.

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் மீண்டும் ஒரு புதிய முயற்சி.

பாரபட்சமின்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே என்பதை ஆழ்ந்து உணர்ந்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் இந்த முயற்சிக்காக ஒரு வாகனம் ஒன்றை வாங்கி ஏதேனும் விசேஷ நிகழ்வுகள் நடந்தால் அதில் உணவுகள் மீந்து இருந்தால் அந்த உணவை நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் தங்களுடைய வாகனத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று அந்த உணவை வாங்கி பசியால் வாடும் ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் அந்த உணவை கொடுத்து வருகின்றனர், திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் ஏதாவது ஒரு விசேஷங்களில் உணவு மீந்து விட்டால் உடனடியாக டிரஸ்ட் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தால் இவர்கள் தங்கள் இடத்திற்கே வந்து உங்கள் உணவை எடுத்து பசியால் வாடும் ஏழை எளியவர்களுக்கு கொடுக்கின்றனர்,

 நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு உணவும் மற்றொருவரின் பசியாறும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று  கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் உணவை வீணாக்காதீர்!

 சகமனிதனின் பசியைப் போக்குவோம்!