ஆதரவின்றி சுற்றித் திரிந்த முதியவரை தன் குடும்பத்திடம் சேர்ந்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

தந்தையை மகனிடம் சேர்த்த மகிழ்ச்சியான தருணம்

திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக ஆதரவின்றி 67வயது மதிக்கத்தக்க சுப்பிரமணி என்ற முதியவர் ஒருவர் சுற்றித் திரிந்தார்.

இவர் வழுக்கோடை அருகில் 12.3.2022 அன்று அமர்ந்திருந்தார் அவரை நமது கருணை கதிர் டிரஸ்டின் உறுப்பினர் திருமலைநம்பி பிளாஸ்டிக் உரிமையாளர் ரவி அவர்கள் அவரை சந்தித்து விசாரித்தபோது அவர் கடந்த கொரோனா காலங்களில் தனது குடும்பத்துடன் சுற்றுலாவிற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார் வந்த இடத்தில் தனது குடும்பங்களை தவறவிட்டு திருநெல்வேலியில் சுற்றி இருக்கிறார்.

அவரது மகன் தேனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் கொடுத்து கடந்த ஆறு மாதங்களாக தேடி வருகிறார் என்று இவ்வளவு விஷயங்கள் தெரிய வந்தது உடனே நமது கருணை கதிர் நண்பர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவரை அழைத்து நமது இல்லத்திற்கு அழைத்து வந்து குளிக்க வைத்து புதிய ஆடை கொடுத்து உணவு கொடுத்து நமது இல்லத்தில் தங்க வைத்துள்ளனர் மேலும் அவரிடம் விசாரித்த போது அவரது சொந்த ஊர் தேனி என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக நமது கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் விரைந்து அவரது மகனை கண்டுபிடித்து அவரிடம் தகவல் கொடுத்தனர் உடனே அவரது மகன் 13.3.2022 இன்று காலை 11 மணியளவில் நமது கருணை கதிர் டிரஸ்டிற்கு வருகை தந்து அன்னதர்ம பணியில் கலந்து கொண்டு அவரது தந்தையை இன்று மதியம் அருள்மிகு நெல்லையப்பர் ஆலையத்தில் சென்று வணங்கிவிட்டு அவரது தந்தையை அழைத்து சென்றார்

மிக்க மகிழ்ச்சி