!! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே!!
“பாரபட்சமின்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே” என்பதை ஆழ்ந்து உணர்ந்த கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் சார்பாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் சாலையில் இருக்கக்கூடிய ஏழை எளிய பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் அன்னதர்ம பணி நடைபெற்று வருகிறது.
ஊரடங்கு:
தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சாலையில் இருக்கக்கூடிய ஆதரவற்ற மற்றும் ஊனமுற்றவர்கள் அனைவர்களுக்கும் கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக அன்னதர்ம பணி நடைபெற்று வருகிறது.
சமூக இடைவெளி:-
கருணை கதிர் டிரஸ்ட்-க்கு உணவு வாங்க வரும் வயதானவர்களை சமூக இடைவெளியுடன் அவர்களை நிறுத்தி முக கவசம் இல்லாதவர்களுக்கு புதியதாக முக கவசம் கொடுத்து உணவு கொடுத்து பல பேரின் பசியாற்றி வருகிறது கருணை கதிர் டிரஸ்ட் மேலும் திருநெல்வேலி சுற்றுப்புறப் பகுதியில் யாரேனுக்கும் உணவு தேவைப்பட்டால் எங்களது கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களை தொடர்பு கொண்டு உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
விசேஷ நிகழ்வில் உள்ள உணவை மீட்டெடுத்தல்:-
திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் இருக்கக்கூடிய எந்த ஒரு விசேஷ நிகழ்வில் உணவு மீந்து விட்டால் அந்த விசேஷ வீட்டுக்காரர்கள் கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். உடனே கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் அந்த உணவை எடுத்து சாலையோரத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு உணவும் மற்றொருவரின் பசி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது
” உணவை வீணாக்காதீர்கள் “
சகமனிதர்களின் பசியைப் போக்குவோம்.








