இலவச கண் பரிசோதனை முகாம் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் – 07.05.2023

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாம்  இன்று 07-05-2023 நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்டில் காலை 10 மணி முதல் மதியம் 2மணிவரை நடைபெற்றது.

இந்த முகாமில் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் ஆகியோர் வந்து பயன்பெற்றனர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை, கண்ணில் பூ உடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக நவீன முறையில் கண்ணில் லென்ஸ்  பொருத்துவதற்கு  கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக 30 நபர்களும் மற்றும் கண் கண்ணாடிக்காக 35 நகரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை  நாகர்கோவில் பெஜான்சிங்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்ணிற்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முகாமில் கலந்து கொண்ட வயதான மூட்டு வலி கொண்ட பெரியவர்களுக்கு ஆர்த்தோ செப்பல் வழங்கப்பட்டது.

சக மனிதனை நேசிப்போம்!!