குளிரில் நடுங்கிய ஆதரவற்றோரின் கரம்பிடித்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

!!குளிரில் நடுங்கிக்கொண்டு உள்ள ஆதரவற்றவர்கள் அனைவருக்கும்  போர்வை மற்றும் பணிக்குல்லா வழங்கிய தருணம்!!

அன்னதர்ம பணியில் கலந்து கொண்ட அண்ணன் ஜி.பி.முத்து அவர்கள் உணவு வழங்கியதில் சந்தோசமடைந்து கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களை அழைத்து தங்களுக்கு  எவ்வாறு உதவ வேண்டும் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். உடனே கருணை கதிர் டிரஸ்ட் நிர்வாகிகள் நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவது இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர் அதை அவரிடம் கூறியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஜி.பி.முத்து அவர்கள் தான் ஏதாவது ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார் உடனே கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் வரும் வாரங்களில் சாலையில் ஆதரவற்றோர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு உள்ளனர் அதை சரி செய்ய போர்வை மற்றும் பனி குல்லா வழங்க உள்ளோம் என்று கூறினோம் உடனே ஜி.பி.முத்து அண்ணன் அவர்கள் அதை நானே வாங்கித் தருகிறேன் என்று உடனே கதிர் நண்பர்களை கடைக்கு அழைத்துச் சென்று போர்வை மற்றும் பணிக்குல்லா வாங்கி அவரின் கையால் டவுன் சுற்றுப்புற பகுதியில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் வழங்கினார் மேலும் இந்த மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் நேரில் சென்று களப்பணி ஆற்றி வருகின்றனர்.

சக மனிதனை நேசிப்போம்!!