நின்றசீர் நெடுமாறன் தந்த சிவாலையத்தில் மகா சிவராத்திரி விழா-2026

மகா சிவராத்திரி விழா 2026

…பற்றுக பற்று அற்றவன் திருவடியை நன்நெஞ்சே நீ நாளும் நினை நெல்லையப்பனே …

நெல்லுக்கு வேலி காத்த அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளின் ஆசியோடு நின்றசீர் நெடுமாறன் தந்த சிவாலையத்தில் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த மகா சிவராத்திரி விழாவிற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக இரவு முதல் காலை 6மணி வரை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால், நிலவேம்பு கசாயம், வெண்ணீர், அவள், இஞ்சி மிட்டாய், பொறி உருண்டை, பிஸ்கட், நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தர்புசணி, கருப்பு திராட்சை மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர் உட்பட பேச்சாளர்கள் போன்றவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு பொங்கல் இடியாப்பம் சப்பாத்தி போன்ற உணவு வழங்கப்பட்டது

இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

https://youtube.com/shorts/I656UVV1F5Q?si=VJSIuAZRgb6jpOml