திருநெல்வேலி தூய்மை பணியாளர்களால் தேசிய கொடியேற்றிய மகிழ்வான நிகழ்வு

!!சக மனிதனுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்!!

உயிர் காக்கும் ராணுவமாக செயல்படும் தூய்மைப் பணியாளர்கள் நாடு முழுவதும் சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் துப்புரவு பணியாளர்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரத்தையும், பெருமதிப்பையும் வழங்குங்கள். அவர்கள் சமூகத்துக்கு சேவை செய்ய விதிக்கப்பட்டவர்கள் அல்ல சேவையாளர்கள்..! என்று தூய்மைப் பணியாளருக்கு பெருமதிப்பை வழங்க வேண்டுமென்று நோக்கில்  கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் சார்பாக திருமதி.சுந்தரி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து விழாவினை சிறப்பித்தனர்.

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக 26.1.2022 காலை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கருணை கதிர் டிரஸ்டின் தலைவர் திரு.பாம்பே கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் டிரஸ்டின் செயலாளர் திரு.பேச்சிமுத்து மற்றும் பொருளாளர் திரு.மணிகண்டன் அவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக மீனாம்பிகை லாரி செட் உரிமையாளர் அண்ணன் திரு.வேல்மணி அவர்களும் எஸ்.எஸ்.பி லாரி செட் உரிமையாளர்கள் அண்ணன் திரு.பொன்மணி குமரன் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் பொன் ரவி, வேல்முருகன், சுரேஷ், ஆவுடையப்பன், ஆரெம்கேவி மூர்த்தி, கொத்தனார் மணி மற்றும் ஹரி  அவர்களும் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.