முகநூல் நண்பர்கள் குழு சார்பாக நெல்லை தாமிரபரணியை சுத்தம் செய்யும் பணி
பொதிகை மலையில் இருந்து உருவாகி பான தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய திருத்தங்களை கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வந்த தாமிரபரணி நதி மற்றும் தண்ணீர் தாய்ப்பாலுக்கு சமமானது
அத்தகைய புண்ணிய நதியை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்
திருநெல்வேலியில் புகழ்பெற்ற முகநூல் நண்பர்கள் குழுவின் சார்பாக 07-07-2024 அன்று காலை நமது தாமிரபரணி நதியின் ஒரு பகுதியான சிந்துபுந்துறை ஆற்றங்கரை பகுதியில் தூய்மைப் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது
அதில் அந்தப் பணியில் பல சமூக அக்கறை உள்ள நல்லுள்ளங்கள் கலந்துகொண்டனர் . அதை தொடர்ந்து விழிப்புணர்வு தரும் நடன நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த பணியில் கலந்துகொண்ட சமூக அக்கறை உள்ள நல்லுள்ளங்களுக்கு நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் சார்பாக காலை டீ பஜ்ஜி சட்னி ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த பணியை மிக சிறப்பாக நடத்திய முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு நெல்லை டேவிட் அவர்களுக்கு நெல்லை கருணை கதிர் ட்ரஸ்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.