11-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் தீபஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்வு

இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு

திருநெல்வேலி டவுண் மேல மவுண்ட் ரோட்டில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 10ஆண்டுகள் நிறைவு பெற்று 11-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது.

இந்த அமைப்பு முழுவதுமே சேவை நோக்கத்தோடு சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதர்ம பனி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

தீபஒளி திருநாளை முன்னிட்டு நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக புத்தாடை வழங்கும் நிகழ்வு கடந்த இரண்டு (19-10-2025 மற்றும் 20-10-2025) நாட்களாக மிக சிறப்பாக நடைபெற்றது

இதில் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் இருக்கக்கூடிய ஏழை எளிய பொதுமக்கள் பலர் பயன் பெற்றனர்.

..சக மனிதர்களை நேசிப்போம்..