ஆசிரமக் குழந்தைகளுடன் மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் – நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக நேற்று மாலை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய ஆசிரமக் குழந்தைகளை அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வந்து அவர்களை அணைத்து இராட்டினங்களிலும் விளையாட வைத்து பிறகு நமது கருணை கதிர் இல்லத்துக்கு அழைத்து வந்து இரவு உணவு வழங்க பட்டது.

வந்திருந்த அணைத்து குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியில் அனைவருக்கும் நன்றி கூறினார்கள். இதற்க்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கருணை கதிர் டிரஸ்ட் சார்பாகவும் ஆசிரம குழந்தைகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

குறிப்பாக இந்த நிகழ்வின் மூலம் நாங்கள் தெரிந்தது என்னவென்றால் நேற்று வந்திருந்த குழந்தைகள் அனைவரும் மிகுந்த வறுமை சூழ்நிலையில் ஆதரவில்லாமல் ஆசிரமத்தில் தங்கி படித்து வருகிறார்கள். அவர்கள் பசியின் கொடுமையை உணர்ந்தவர்கள் நேற்று அவர்கள் நமது இல்லத்தில் உணவு உண்ணும் பொழுது அவர்கள் இலையில் ஒரு பருக்கை உணவை கூட அவர்கள் வீணாக்கவில்லை. எனவே இந்த குழந்தைகளிடமிருந்து நாம் கற்ற பாடமாக இதை கருத்தில் கொண்டு நாம் உண்ணும் உணவை வீணாக்காமல் இருப்பதே நாம் செய்யும் தர்மத்தில் மிகப்பெரிய தர்மமாகும் . பசி மிக கொடியது.
சக மனிதர்களை நேசிப்போம்