தேரோட்ட விழாவில் மீந்துள்ள 2000 நபர்கள் சாப்பிடும் உணவு வீணாக்காமல் பசியில் இருப்பவர்களுக்கு கொடுத்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

!நடத்துவதும் நீயே- நடப்பதும் நீயே!

21-06-2024 தேரோட்ட விழாவில் மீந்துள்ள 2000 நபர்கள் சாப்பிடும் உணவு

வீணாக்காமல் பசியில் இருப்பவர்களுக்கு கொடுத்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

 

அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி தேரோட்ட விழாவினை முன்னிட்டு

திருநெல்வேலி டவுண் சுற்றுப்புறப் பகுதிகளில் பல நண்பர்கள் அன்னதர்ம பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அன்னதர்ம பணியில் மீந்துள்ள உணவுகளை நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் எடுத்து சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பேட்டை நரிக்குறவர் சொந்தங்களுக்கு சுமார் *2000 நபர்கள் சாப்பிடும் உணவு* அவர்களுக்கு வழங்கப்பட்டது

ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
!! நாம் உண்ணும் உணவை வீணாக்காமல் இருப்பதே முதல் தர்மம் !!