செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச வர்ம வைத்திய முகாம்
கடந்த 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை நமது இல்லத்தில் செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் உடல் வலி,இடுப்பு வலி,கை கால் வலி,கழுத்து வலி, மூட்டு தேய்மானம் ஜவ்வு விலகுதல் போன்ற அனைத்து வியாதிகளும் சிறந்த முறையில் இலவசமாக சரிசெய்யப்பட்டது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நீண்ட நாள் குணப்படுத்த முடியாமல் இருந்த வலியை 5 நிமிடத்தில் இலவசமாக சரி செய்தார் . இதனால் இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார். மேலும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்தில் கருணை கதிர் நண்பர்களிடம் தங்களது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்களின் ஆர்வத்தை கண்டு வியந்து போன தர்மசீலன் வர்ம ஆசான் மரியாதைக்குரிய மூவர் பூபதி அவர்கள் இதேபோன்று இலவசமாக மாதம் ஒரு முறையாவது இந்த மக்களுக்கு நான் சேவை செய்ய முன் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று ஒரு நாள் முழுவதும் நேரத்தை ஒதுக்கி மக்களுக்காக சேவை செய்த தர்மசீலன் வர்ம ஆசான் மரியாதைக்குரிய மூவர் பூபதி அவர்களுக்கு கருணை கதிர் ட்ரஸ்ட் மற்றும் பொதுமக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்கள் பொது சேவை பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நீங்கள் 16 செல்வமும் 32 அரங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



