இயன்றதை செய்வோம் இயலாதவற்கே….
பீகாரில் இருந்து திருநெல்வேலிக்கு வேலைக்காக வந்த அஸ்லாம் ஆதரவின்றி டவுண் சுற்றுப்புற பகுதியில் பசியில் சுற்றி இருந்தார், இவரை சில மனசாட்சியற்ற மனித மிருகங்கள் துன்புருத்தி வந்தனர், மனஉளைச்சளுக்கு ஆளான அஸ்லாம் கருணை கதிர் இல்லத்திற்கு வந்து தினமும் மதியம் மற்றும் இரவு சாப்பிட்டுவிட்டு அங்கையே உறங்கிருவார் நேற்று கருணை கதிர் நண்பர்கள் அஸ்லாம்-க்கு முடி வெட்டி சவரன் செய்து அழகு செய்த போது (அஸ்லாம்) விரட்டியடிக்கும் இந்த சமூகத்தில் என்னையும் சகமனிதனாக உங்களில் ஒருவனாக சேர்த்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி என இரு கைகோர்த்து ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறினார். மகிழ்ச்சியான தருணம் சக மனிதர்களையும் நேசிப்போம்….


