திருநெல்வேலியில் மாபெரும் ஆணி தேரோட்ட பெருவிழா (21-06-2024)

!திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்ட விழா!

!!லட்சக்கணக்கான பொது மக்கள் கூடும் விழா!!
!!சேவை பணியில் ஈடுபட்டுள்ள நெல்லை கருணை கதிர் நண்பர்கள்!!

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக
ஆனி தேரோட்ட விழாவை முன்னிட்டு வரக்கூடிய பொது மக்களுக்கு மீனாம்பிகா லாரி செட்டில் வைத்து பொதிகை மலையில் இருந்து உருவாகி பான தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய திருத்தங்களை கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வந்த தாமிரபரணி நதி மற்றும் தண்ணீர் தாய்ப்பாலுக்கு சமமானது அத்தகைய நீரை பாபநாசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு தண்ணீர், நீர்மோர், எலுமிச்சைச் சாறு மற்றும் மாங்காய்* போன்றவை வழங்கப்பட்டது

அதைத்தொடர்ந்து
திருநெல்வேலி சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அன்னதர்ம பணி எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ????????????????

சக மனிதனின் பசியை போக்குவோம்