நெல்லை கருணை கதிர் டிரஸ்டின் 10-ஆம் ஆண்டு துவக்க விழா
திருநெல்வேலி டவுண் மேல மவுண்ட் ரோட்டில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 9ஆண்டுகள் நிறைவு பெற்று 10ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது .
இந்த அமைப்பு முழுவதுமே சேவை நோக்கத்தோடு சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதர்ம பனி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் ஏதேனும் விஷேச நிகழ்வில் மீந்திருந்த உணவை வீணாக்காமல் பசியால் இருக்கும் ஏழைகளுக்கு கொடுத்துவருகின்றனர்.
அதை தொடர்ந்து இரத்ததானம்,மரக்கன்றுகள் வழங்குவது,மற்றும் சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
இந்த சேவைக்கு யாரிடமும் பணம் வாங்குவதில்லை .உதவ விரும்புவோரிடம் இருந்து பொருள்களை மட்டுமே வாங்கி இந்த பணியை கடந்த 9ஆண்டுகளாக செய்து வருகின்றனர். தற்போது 10ஆம் ஆண்டை எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு அடியெடுத்து வைக்கிறது.