இயன்றதை செய்வோம்!! இயலாதவர்களுக்கு!!
என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பு வாரம் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதர்ம பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது
இந்த (28-11-2021) வார அன்னதர்ம பணிக்கு சிறப்பு விருந்தினராக உடன்குடியைச் சேர்ந்து தன்னுடைய உழைப்பினால் மற்றும் திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்து இருக்கக்கூடிய டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து அண்ணன் அவர்கள் நமது கருணை கதிர் டிரஸ்ட்க்கு வருகை தந்துள்ளார்,
கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் மற்றும் ஜி.பி.முத்து அண்ணன் அவர்களின் ரசிகர்களின் கூட்டம் சூழ்ந்துள்ளது மேலும் ஜி.பி.முத்து அண்ணன் அவர்கள் கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களுடன் இணைந்து ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார் மிக மகிழ்ச்சியான தருணம்.





