https://youtu.be/-Cn623-6zsA
மனித நேயம் காப்போம்
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு டிரஸ்டின் சார்பாக பல சேவைகள் தற்போது வரை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு நாயகன் உதயமாகிறான்
அதில் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நமது கருணை கதிர் ட்ரஸ்ட்டில் உறுப்பினர் ஒருவர் இரவு உணவு உண்பதற்காக கடைக்கு சென்றபோது கடை வாசலில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மிகக் கொடிய பசியில் நின்ற போது நமது நமது உறுப்பினர் அவருக்கு இரவு உணவு வாங்கி கொடுத்துவிட்ட பிறகு வீடு திரும்பினார். இந்த மனிதரை புதிய மனிதனாக உருவாக்க வேண்டும் என்று ஆறுமுகம் அவர்களிடம்தெரிவித்தார் ஆக்கப்பூர்வமான செயல்களில் பொருளாளர் மணிகண்டன் அவரைத் தேடி கண்டுபிடித்து டிரஸ்ட் அழைத்து வந்தார் அவருக்கு தலை வாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது அவரது உடம்பில் கயிறுகள் கட்டப்பட்டிருந்தது அதெல்லாம் அவிழ்க்க ப்பட்டு புது ஆடை அணிவித்து மகிழ்ந்த கருணைகதிர் நண்பர்கள்.நேற்று இரவு அதே மனநல பாதிக்கப்பட்ட மனிதர் திருநெல்வேலி டவுன் சுற்றுப்புற பகுதிகளில் உடல்நிலை பாதித்து மிகவும் மோசமான நிலையில் சுற்றி திரிந்தார் அவரை உடனடியாக தனது வாகனத்தில் நமது இல்லத்திற்கு அழைத்து வந்து அவரை சுத்தம் செய்து புது ஆடை உடுத்தி இரவு உணவு கொடுத்து அவரை பாதுகாப்பாக தங்க வைத்தனர். அதன் பிறகு அந்த மனநல பாதிக்கப்பட்ட நபரின் பெயர் முத்துக்குமார் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. சற்று நேரத்தில் அந்த மனநல பாதிக்கப்பட்ட மனிதர் முத்துக்குமார் மிக எளிமையாக கருணைக்கதிர் டிரஸ்ட் உறுப்பினர்களுடன் பாடல் பாடி மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார். இதே போன்ற மனிதர்களை நாம் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து சக மனிதர்களையும் நேசிப்போம் என்ற வாக்கிற்கு இணங்க செயல்பட வேண்டும் என்று கூறிக்கொண்டு எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்.
சக மனிதனை நேசிப்போம்

