தினமும் இரவு தோசை மாவு வழங்குதல்-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக பல சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் புது முயற்சியாக நம்மில் ஒருவரான மரியாதைக்குரிய அண்ணன் திரு.ஜவகர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக மீனாம்பிகை லாரி செட் உரிமையாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.வேலுமணி அவர்களும் இணைந்து திருநெல்வேலி சுற்றுப்புறப் பகுதிகளில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் என சுமார் 30 நபர்களுக்கு மேலாக தினமும் இரவு தோசை மாவு கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் உதவியுடன் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தற்போது வரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் புது முயற்சியை தொடங்கிவைத்த அண்ணன் ஜவஹர் மற்றும் அண்ணன் வேலுமணி அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் இறைவனின் அருட்பார்வை பெற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறோம்
!!வாழ்க வளமுடன்!!