!! இரவு நேர அன்னதர்ம பணி !!
வாடிய வயிற்றின் குரல்…
குடல்கள் கதறக் கண்கள் இருட்ட…
செவிகளும் சத்தமிட்டது பசியில்…
படைத்தவன் அலட்சியத்தால் பசியொடு நானிருக்க…
மிச்ச மீதியையும் குப்பையில் எறிகிறது சமூகம்!
குப்பையில் கிடக்கும் உணவை எண்ணி
புன்னகிக்கிறது எங்கள் வயிறு!
உழைக்க வயதில்லாத
உருவத்தில் சிறியவரும்
உழைத்து உழைத்து வாடிய
வயதில் பெரியவரும்
பிழைக்க வழியில்லாமல்
பசியால் வாடுகின்றனர்
சிலைக்கு உணவூட்டி மகிழும்
சிந்தனை உலகத்தில்
சிலரின் பசிக்கும் உணவளித்து
அன்னத்தை வீணாக்காமல்
அன்னதானம் ஆக்கலாம்
பசியைத் தவிர்க்கலாம்.
இரவு நேர அன்னதர்ம பணி
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு
செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்
பேட்டை கோவில் கொடை விழாவில் மீந்த உணவுகளை
எடுத்து பசியால் இருப்பவர்களுக்கு வீணக்காமல் கொடுத்தனர்.