மாசி மகா சிவராத்திரி விழா
26-02-2025 இரவு நெல்லுக்கு வேலி காத்த அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளின் ஆசியோடு நின்றசீர் நெடுமாறன் தந்த சிவாலையத்தில் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த மகா சிவராத்திரி விழாவிற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு ஆண்டுதோறும் நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக இரவு முதல் காலை 7மணி வரை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான காபி, பால், அவள், இஞ்சி மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், பொறி உருண்டை, பிஸ்கட், உப்புமா, ருத்ராட்சம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு குடம் போன்றவை வழங்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி












